Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரபல நடிகை ரோஜா மருத்துவமனையில் அனுமதி !

Advertiesment
பிரபல நடிகை ரோஜா மருத்துவமனையில் அனுமதி !
, செவ்வாய், 30 மார்ச் 2021 (15:36 IST)
பிரபல நடிகையும் ஆந்திர மாநில சட்டமன்ற உறுப்பினருமான ரோஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 1992 ஆம் ஆண்டு தமிழ்சினிமாவில் இயக்குநர் ஆர்.கே.செல்வமணியின் இயக்கத்தில் உருவான செம்பருத்தி என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆனவர் ரோஜா. பின்னர் இவர்கள் இருவரும் கடந்த 2002 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

அரசியலில் ஈடுபாடு கொண்ட ரோஜா  கடந்த 2014 ஆம் ஆண்டு ஆந்திராவின் நகரி தொகுதியிலிருந்து ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் சார்பில் எம்.எல்.ஏ,வாக தேர்வு ஆனார். பின்னர் 2019 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக எம்.எல்.ஏஆக தேர்வு ஆனார். தற்போது ஆந்திர மாநிலத்தில் தொழிற்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பின் தலைவராக அவர் உள்ளார்.

இந்நிலையில் ரோஜாவுக்கு கர்ப்பப்பையில் பிரச்சனை இருந்ததால் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாவும், தற்போது தீவிர சிகிச்சைப்பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஆர்.கே.செல்வமணி கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திடீரென வைரலாகும் பிரியாமணி - கண்ணை மறைக்கும் கவர்ச்சி ஸ்டில்ஸ்!