Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வாழ்த்து சொன்னதற்கு திட்டிய விஜய் சேதுபதி? – நீதிமன்றத்தில் வழக்கு!

Advertiesment
வாழ்த்து சொன்னதற்கு திட்டிய விஜய் சேதுபதி? – நீதிமன்றத்தில் வழக்கு!
, ஞாயிறு, 5 டிசம்பர் 2021 (13:56 IST)
நடிகர் விஜய் சேதுபதியை பாராட்டியதற்கு பதிலுக்கு அவர் திட்டியதாக வழக்கு தொடரப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் பல காலமாக ஜூனியர் ஆர்டிஸ்டாக இருந்து பின்னர் பிரபலமான ஹீரோவாக உருவானவர் நடிகர் விஜய் சேதுபதி. தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. இதுதவிர மாஸ்டர் செப் நிகழ்ச்சியை தமிழில் தொகுப்பாளராக தொகுத்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி மீது சென்னை நீதிமன்றத்தில் மகா காந்தி என்பவர் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் விஜய் சேதுபதியை பாராட்டி வாழ்த்து தெரிவித்ததாகவும், அதை ஏற்றுக் கொள்ளாத அவர் இழிவுப்படுத்தி தவறான வார்த்தைகளால் பேசியதாகவும், அதனால் அவர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகர் சத்யராஜ் வீட்டில் நிகழ்ந்த துயரம்: திரையுலகினர் இரங்கல்!