Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மகனுக்கு கேக் ஊட்டி வாழ்த்திய கேப்டன்… வைரலாகும் குடும்ப புகைப்படங்கள்!

மகனுக்கு கேக் ஊட்டி வாழ்த்திய கேப்டன்… வைரலாகும் குடும்ப புகைப்படங்கள்!
, புதன், 6 ஏப்ரல் 2022 (16:05 IST)
நடிகரும் அரசியல் வாதியுமான கேப்டன் விஜயகாந்த் தன்னுடைய மகன் சண்முகப்பாண்டியனை அவரது பிறந்த்நாளில் வாழ்த்தியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர் விஜயகாந்த். தனது ரசிகர்களுக்கும் ஏழை எளிய மக்களுக்கும் இவர் ஏராளமான உதவிகள் செய்துள்ளார். கடந்த 2004 ஆம் ஆண்டு தேமுதிக என்ற அரசியல் கட்சியைத் தொடங்கிய அவர் சில ஆண்டுகளில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற சாதனை படைத்தார்.

சமீப நாட்களாக நடிகர் விஜயகாந்த் உடல் நடல்க்குறைவால் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அரசியல் முக்கிய நிகழ்வுகளில் மட்டும் பங்கெடுத்து வருகிறார். கட்சியை அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் நிர்வகித்து வருகிறார். இந்நிலையில் இப்போது நடிகர் விஜயகாந்த் தற்போது தனது குடும்பத்தோடு மகிழ்ச்சியாக இருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகின்றன.

விஜயகாந்த் பிரேமலதா தம்பதியினரின் இளைய மகனான சண்முகபாண்டியனின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு கேக் ஊட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார் கேப்டன் விஜயகாந்த்.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூர்யா தயாரிப்பில் அருண் விஜய் நடிக்கும் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!