Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாசர் மகன் நடிக்கும் படத்தை இயக்குகிறார் கேபிள் சங்கர்!

நாசர் மகன் நடிக்கும் படத்தை இயக்குகிறார் கேபிள் சங்கர்!
, திங்கள், 2 நவம்பர் 2020 (11:32 IST)
இயக்குனர் கேபிள் சங்கர் இயக்கும் புதிய படத்தில் நாசரின் மகன் அபிஹசன் கதாநாயகனாக நடிக்க உள்ளார்.

பிரபல பதிவராகவும் சினிமா சம்மந்தப்பட்ட புத்தகங்களை எழுதியவருமான கேபிள் சங்கர் தொட்டால் தொடரும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதன் பின் ஆறு அத்தியாயங்கள் படத்தின் ஒரு பகுதியை இயக்கினார். இந்நிலையில் இப்போது அவர் நாசர் மகன் அபி ஹசன் நடிக்கும் புதிய படத்தை இயக்க உள்ளார். மினிமம் பட்ஜெட்டில் படங்களை எடுத்து வெற்றி பெற்ற தயாரிப்பாளர் என அறியப்பட்ட சி வி குமார் இந்த படத்தினை தயாரிக்க உள்ளார்.

மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திரௌபதி படத்தை வாங்கிய முன்னணி தொலைக்காட்சி நிறுவனம்!