சென்னையில் பிரேசில் லெஜண்ட்ஸ் - இந்தியா ஆல் ஸ்டார்ஸ் அணிகள் மோதிய நட்சத்திர கால்பந்து போட்டியில், பிரேசில் லெஜண்ட்ஸ் அணி வெற்றிபெற்றது. இந்தப் போட்டிக்காக வந்த பிரபல வீரர் ரொனால்டினோவை, நடிகர் அஜித்தின் மகன் ஆத்விக் சந்தித்தபோது அவருடைய தலையை தடவி ஆசி வழங்கினார்.
நேற்று சென்னையில் பிரேசில் லெஜண்ட்ஸ் மற்றும் இந்திய ஆல் ஸ்டார்ஸ் அணிகள் நேரு விளையாட்டரங்கில் மோதின. ரொனால்டினோ தலைமையில் பிரேசில் அணியும், இந்திய அணியை முன்னாள் வீரர் விஜயன் வழிநடத்தினர். இந்த போட்டியில் பிரேசில் 2-1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியை பார்க்க நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி மற்றும் மகன் ஆத்விக் மைதானத்துக்கு வந்திருந்தனர். ரொனால்டினோவின் தீவிர ரசிகராக உள்ள ஆத்விக்கின் தலை மீது ரொனால்டினோ கருணையாகக் கை வைத்து ஊக்கமளித்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அஜித்தின் மகன் ஆத்விக் கால்பந்து போட்டியில் மிகுந்த ஆர்வம் உள்ளவர் என்பதும் பள்ளி அளவில் நடந்த சில போட்டிகளில் பங்கேற்ற நிலையில் இந்த போட்டியை பார்க்க ஆர்வத்துடன் வந்திருந்தபோது இன்ப அதிர்ச்சியாக ரொனால்டினோவை சந்தித்தது அவருக்கு வாழ்நாளில் ஒரு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும் என்று கூறப்பட்டு வருகிறது.