இன்றைய ஐபிஎல் போட்டியில் மாலை நேரப் போட்டியில் CSK vs RR அணிகள் மோதிக் கொள்ளும் நிலையில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஐபிஎல் சீசன் தொடங்கி 10 அணிகளுக்கு இடையேயான போட்டிகள் பரபரப்பாக நடந்து வருகின்றன. இன்று ஐபிஎல் போட்டியில் மாலை நேர ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதிக் கொள்ள உள்ளன.
முன்னதாக 2 போட்டிகளில் விளையாடியுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, இரண்டு போட்டிகளிலுமே தோற்று தரவரிசையில் கடைசி இடத்தில் உள்ளது. அதனால் இன்று எப்படியாவது வென்று விட கடும் முயற்சிகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதிய 2 போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்று, ஒன்றில் தோல்வியடைந்து தரவரிசையில் 8ம் இடத்தில் உள்ளது. சிஎஸ்கேவின் நெட் ரன் ரேட்டும் மிகவும் குறைவாக உள்ளது.
ஆர்சிபிக்கு எதிரான கடந்த போட்டியில் சென்னை அணியுன் மோசமான பேட்டிங் ஆர்டரை ரசிகர்கள் பலருமே விமர்சித்திருந்தனர். இதே பாணியில் சென்றால் சென்னை அணி தொடர்ந்து தோல்விகளை எதிர்கொள்ள நேரிடும் என ரசிகர்கள் அஞ்சுகின்றனர்.
கடந்த இரண்டு போட்டிகளாக டெவான் கான்வேயை உள்ளே அழைத்து வராமல் இருக்கும் சிஎஸ்கே இன்றைய போட்டிக்காவது அவரை ஓப்பனிங்கில் இறக்க வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. தோனியால் சிறப்பான பங்களிப்பை வழங்க முடியுமானால் அவர் மிடில் ஆர்டரில் இறங்க வேண்டும் என்ற கருத்தும் உள்ளது. கடந்தமுறை சென்னை அணி ஃபீல்டிங்கில் பல கேட்ச்களை கோட்டை விட்டதும் ஆர்சிபி ரன்களை குவிக்க காரணமாக அமைந்தது.
எனவே சென்னை அணி பேட்டிங், பீல்டிங் இரண்டில் எது வலிமையாக உள்ளது என்பதை கணக்கிட்டு, டாஸ் வென்றால் அதற்கேற்ப முடிவை மேற்கொள்ள வேண்டியதுள்ளது.
இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் ஜெயக்(வெற்றி)கடவா? பலிக்கடாவா? என்பது குறித்த கவலை ரசிகர்களிடையே உள்ளது.
Edit by Prasanth.K