பூஜைப் பொருட்கள் தொட்டதற்காக சிறுவனை கட்டி வைத்து அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	உலகம் எவ்வளவோ முன்னேறிவிட்டது. ஒவ்வொரு தேசத்திலும் படித்த இளைஞர்கள் இன்னும் எப்படி முன்னேறுவது என்று சிந்தித்து வருகிறார்கள். அரசாங்கமும் அடுத்த தலைமுறையினருக்கு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இணையதளமும் தொழில் நுட்பமும் அதிகரித்துள்ள இக்காலத்தில் இனப்பாகுபாடும் சாதிவெறியும் அதிகரித்துள்ளதா என மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
 
									
										
			        							
								
																	சமீபத்தில், இந்திய பெண்களை பார்த்த அமெரிக்காவில் ஒரு பெண் இனப்பாகுபாடு காட்டினார். இது பெரும் சர்ச்சையானது.
 
									
											
							                     
							
							
			        							
								
																	இந்த நிலையில், இந்தியாவில் வட மாநிலத்தில், ஒரு பட்டியலின சிறுவன் பூஜைப் பொருட்களைத் தொட்டதற்காக அந்த வீட்டைச் சேர்ந்தவர்கள், சிறுவனை மரத்தில் கட்டிவைத்து, அடித்துக் கொடுமை படுத்தினர். 
 
									
			                     
							
							
			        							
								
																	இந்த வீடியோ வைரலாகி வருகிறது.