தமிழகத்தில் உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் சேர 200 வட மாநிலத்தவர் போலி சான்றிதழ் அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் அஞ்சலக துறை, இந்தியன் ஆயில், சிஆர்பிஎப் உள்ளிட்ட பல பொதுத்துறை நிறுவனங்கள் தமிழகத்தில் செயல்பட்டு வந்தாலும், இந்த நிறுவனங்களில் தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பது குதிரை கொம்பாக உள்ளதாக புகார்கள் இருந்து வருகின்றன.
இந்நிலையில் மத்திய அரசின் யுபிஎஸ்சி சான்றிதழ் சரிபார்ப்புக்காக தமிழக அரசு தேர்வுகள் துறைக்கு அனுப்பிய பல சான்றிதழ்கள் போலியானவை என ஆய்வில் தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் படித்தது போல போலி சான்றுகளை காட்டி 200 வட மாநிலத்தவர் பொதுத்துறை நிறுவனங்களில் பணிக்கு சேர்ந்தது அம்பலமாகியுள்ளது.
போலி சான்றிதழ் அளித்தவர்கள் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க பரிந்துரைத்துள்ள அரசு தேர்வுகள் துறை அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க பொதுத்துறை நிறுவனங்களுக்கும் பரிந்துரை செய்துள்ளது.