Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒரே நாளில் சகோதரன் மற்றும் சகோதரியை இழந்த நடிகர் போஸ் வெங்கட்!

ஒரே நாளில் சகோதரன் மற்றும் சகோதரியை இழந்த நடிகர் போஸ் வெங்கட்!
, சனி, 24 ஜூன் 2023 (07:04 IST)
மெட்டி ஒலி சீரியலில் போஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான வெங்கட் அதன் பின்னர் போஸ் வெங்கட் என்றே அழைக்கப்பட்டார். அதன் பின்னர் திரைப்படங்களில் அவர் குணச்சித்திர மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். அதன் பின்னர் அவர் கடந்த ஆண்டு கன்னிமாடம் என்ற படத்தை இயக்கி அதன் மூலம் இயக்குனராகவும் அறியப்பட்டார்.

இந்நிலையில் நேற்று ஒரே நாளில் அவரின் சகோதரி மற்றும் சகோதரன் ஆகிய இருவரும் மரணமடைந்துள்ளது அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவரின் சகோதரி வளர்மதி மாரடைப்புக் காரணமாக நேற்று உயிரிழந்த நிலையில் அவரின் இறுதி சடங்கில் கலந்துகொண்ட சகோதரர் ரங்கநாதனும் மாரடைப்புக் காரணமாக உயிரிழந்துள்ளார்.

ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து நடந்துள்ள இரட்டை மரணத்தால் உடைந்து போயிருக்கும் போஸ் வெங்கட்டுக்கு திரைப் பிரபலங்களும், ரசிகர்களும் ஆறுதல் கூறி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

படுகவர்ச்சியாக உடையில் கும்முனு போஸ் கொடுத்த தர்ஷா குப்தா!