கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1996-ல் வெளியாகி பெறும் வெற்றி பெற்ற இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் ‘இந்தியன்-2’ என்ற பெயரில் தயாராகிறது. பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இந்த படத்தை இயக்குகிறார். நேற்று இந்தியன் 2 படத்தின் ஷுட்டிங், பூஜையுடன் தொடங்கியது.
இதில் கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இன்னொரு கதாநாயகி வேடத்துக்கு தென்கொரிய நடிகை பே சூஸியிடம் பேசி வருகிறார்கள். இந்தியன் படத்தின் முதல் பாகத்தின் இறுதி காட்சி வெளிநாட்டில் முடிவடையும். இரண்டாம் பாகம் தைவானில் தொடங்கி இந்தியாவுக்கு வருவதுபோல் திரைக்கதை அமைத்துள்ளனர்.
தைவான் காட்சிகளில் பே சூஸி நடிக்கிறார். இந்த படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க இந்தி நடிகர் அக்ஷய்குமாரிடம் பேசி வருகிறார்கள். ரஜினியின் 2.0 படத்தில் அக்ஷய்குமார் வில்லான நடித்ததால் வட மாநிலங்களில் வசூலில் டாப்பாக இருந்தது.
இதனால் இந்த படத்திலும் நடிக்குமாறு அக்ஷய்குமாரிடம் பேசிவருகிறார்கள். ஆனால் அக்ஷய்குமார் நடிக்க மறுத்துவிட்டார். எனினும் தொடர்ந்து பேசிவருகிறார்கள். தொடர்ந்து 3 மாதங்கள் படப்பிடிப்பு நடக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதில் கமல், காஜல் அகர்வால் நடிக்க உள்ளனர்.