Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எனக்கென காட்பாதர்கள் கிடையாது – பாலிவுட் நடிகை ஓபன் டாக்!

Advertiesment
எனக்கென காட்பாதர்கள் கிடையாது – பாலிவுட் நடிகை ஓபன் டாக்!
, ஞாயிறு, 9 ஆகஸ்ட் 2020 (17:10 IST)
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்த ரவீனா டண்டன் தனக்கு பாலிவுட்டில் நடந்த மோசாமான அனுபவனங்கள் குறித்து பேசியுள்ளார்.

2000 ஆம் ஆண்டு தொடக்கங்களில் பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ரவீணா டண்டன் திருமணத்துக்குப் பின் சினிமாவை விட்டு விலகி இருந்தார். இதையடுத்து இப்போது கே ஜி எஃப் படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தமிழில் ஆளவந்தான் மற்றும் சாது ஆகிய படங்களில் நடித்த இவரை தமிழ் ரசிகர்கள் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டார்கள்.

இந்நிலையில் இவர் மீடூ பற்றி பகீர் குற்றச்சாட்டு ஒன்றை வைத்துள்ளார். அதில் ‘முதலில் பாலிவுட்டில் எனக்கு வந்த வாய்ப்புகள் அனைத்தும் மறுக்கப்பட்டன. அதற்கு நடிகர்களுடன் படுக்கையை பகிர வேண்டும் என்ற பாலிவுட்டின் எழுதப்படாத விதி. அதற்கு நான் ஒத்துக்கொள்ளாததால் எனக்கான வாய்ப்புகள் தடுத்து நிறுத்தப்பட்டன’ என குற்றச்சாட்டை வைத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் இப்போது ‘என்னைப் பற்றி நிறைய மோசமாக எழுதப்பட்டன. சில பத்திரிக்கையாளர்களே என்னை ஒதுக்கினார்கள். ஏனென்றால் என்னை பிடிக்காத ஹீரோக்கள் அவர்களுக்கு பேட்டி தருவதாக சொல்லி இருப்பார்கள். எனக்கென காட்ஃபாதர்கள் கிடையாது. நான் எந்த கூடாரத்திலும் இல்லை. எந்த ஹீரோக்களும் எனக்கு ஆதரவு அளிக்கவில்லை. அப்போது என்னைப் பற்றி மோசமாக பத்திரிக்கைகளில் எழுதப்பட்டன. நான் எந்த ஹீரோவுக்கும் அடங்கி இருக்கவில்லை. என் வாழ்க்கையை என் விதிகளின் படி வாழ்ந்தேன். எனக்காக சில சிறந்த வாய்ப்புகள் கிடைத்தன. எனக்கென ஒரு பெயர் சம்பாதித்தேன்’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

Mr Simbu நன்றியதில் Mr பண்பு - பார்த்திபனுக்கு சாக்லேட் கொடுத்த சிம்பு!