ஊரடங்கால் வாய்ப்பு இல்லை: தெருவில் பழம் விற்கும் நடிகர்

வெள்ளி, 22 மே 2020 (12:56 IST)
தெருவில் பழம் விற்கும் நடிகர்
கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு தொழில்கள் முடங்கி உள்ள நிலையில் கோடிக்கணக்கானோர் வேலை இழந்து வருமானமின்றி கஷ்டத்தில் உள்ளனர் 
 
இந்த நிலையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட துறைகளில் ஒன்று சினிமா துறை. இந்த துறையில் கடந்த இரண்டு மாதங்களாக படப்பிடிப்பு உள்பட எந்த வித பணிகளும் நடைபெறாததால் சினிமா துறையில் பணிபுரியும் பல தொழிலாளர்கள் பசியும் பட்டினியுமாக உள்ளனர் 
 
இந்த நிலையில் ஆயுஷ்மான் குரானா உடன் ’ட்ரீம் கேர்ள்ஸ்’ என்ற படத்தில் நடித்த நடிகர் சோலங்கி திவாகர் என்பவர் இந்த கொரோனா ஊரடங்கால் பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் தனது அன்றாட தேவைகளுக்காக தெருவில் பழம் விற்று வாழ்வை நகர்த்தி வருகிறார். நடிகர் சோலங்கி பழம் விற்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி, நடிகர் ஒருவருக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளது என கமெண்ட்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் கோப்ரா படத்தின் ஷூட்டிங் குறித்த ருசிகர தகவல் !