Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் சிம்புவை சீண்டிய ப்ளூ சட்டை மாறன்

Webdunia
வியாழன், 22 செப்டம்பர் 2022 (14:45 IST)
ப்ளூ சட்டை மாறனுக்கும் வெந்து தணிந்தது படக்குழுவுக்கும்  வார்த்தை மோதல் ஏற்பட்டு  நிலையில், இன்று மீண்டும் நடிகர் சிம்புவை சீண்டியுள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி ரிலீஸான படம் வெந்து தணிந்தது காடு. இப்படம்  நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இப்படம் பற்றி ப்ளு சட்டை மாறன் தன் Tamiltalkies என்ற யூடியூப் தளத்தில், வெ.த.கா படத்தைப் பற்றிய விமர்சனம் செய்து வீடியோவைப் பதிவிட்டிருந்தார்.

அதில், இயக்குனர் கெளதம் மேனனை வாய்ஸ்ஓவர் பைத்தியம்; சிம்புவை வீணாபோனவன் டான் ஆன கதை; அப்படத்தில் நடித்த  நடிகர் ஜாஃபரின் உயரத்தையும் கேலி செய்திருந்தார்.

இதற்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பின்போது, பேசிய சிம்பு, உருவக்கேலி செய்வது தவறு என்று தன் கருத்தைக் கூறியிருந்தார்.

அதன்பின், சிம்பு நடிப்பில் வெளியான காளை, தம் ஆகிய படங்களில் இடம்பெற்ற பாடல் வரிகளில் உருவகேலி இருப்பதை ப்ளூ சட்டை மாறன் தன் டுவிட்டரில் பதிவிட்டிருனந்தார்.

இதையடுத்து, இன்று  சிம்பு நடிப்பில்  2008 ஆம் ஆண்டில் வெளியான  சிலம்பாட்டம் படத்தில் இடம்பெற்ற் ஒரு காட்சியை குறிப்பிட்டு, அர்ச்சகராக சிம்பு. கோவிலுக்குள் கரண்ட் கட் ஆனதும்.. கன்னிப்பெண்கள் எல்லாம் சேர்ந்து இவர் உடம்பில் Massage செய்யும் காட்சி.

கோவில் புனிதம் மற்றும் அர்ச்சகர்களை  அவமானப்படுத்திய இந்த சீன் 'பாடி ஷேமிங்' இல்லையா தம்பி? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

அடுத்த கட்டுரையில்
Show comments