பிரபல திரைப்பட விமர்சகர் புளுசட்டை மாறன் இயக்கத்தில் உருவான ஆன்டி இந்தியன் என்ற திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியானது என்பதும் இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது
ஒரு சிலர் இந்த படம் நன்றாக இருப்பதாகவும் ஒரு சிலர் இந்த படம் குப்பையாக இருப்பதாகவும் விமர்சனங்கள் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் தமிழில் வெளியான இந்த படம் விரைவில் ஹிந்திக்கு செல்ல உள்ளதாகவும் இந்த படத்தின் இந்தி ரீமேக் குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படத்தின் ஹிந்தி ரீமேக் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது
மேலும் இந்த படத்தின் ஹிந்தி ரீமேக்கில் புளுசட்டை மாறன் இயக்குவார் என்றும் அவர் நடித்த கேரக்டரில் அவரே நடிப்பார் என்று கூறப்படுகிறது. புளுசட்டை மாறன் இயக்கிய முதல் படமே பாலிவுட்டுக்கு செல்ல உள்ளது திரையுலக வட்டாரங்களில் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.