பிஸ்கோத், இரண்டாம் குத்து வசூல் எவ்வளவு?

Webdunia
திங்கள், 16 நவம்பர் 2020 (18:19 IST)
பிஸ்கோத், இரண்டாம் குத்து வசூல் எவ்வளவு?
தமிழகத்தில் கடந்த 7 மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில் சமீபத்தில்தான் திரையரங்குகள் திறக்கப்பட்டன. இருப்பினும் தீபாவளி வரை பழைய திரைப்படங்கள் மட்டுமே திரையிடப்பட்டு இருந்த நிலையில் தீபாவளியன்று பிஸ்கோத் மற்றும் இரண்டாம் குத்து ஆகிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகின.
 
இருப்பினும் தமிழக அரசின் நிபந்தனைப்படி 50 சதவீதம் மட்டுமே இருக்கைகள் நிரப்பப்பட்டு திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இந்த நிலையில் தீபாவளி அன்று வெளியான பின் சந்தானம் நடித்த பிஸ்கோத் திரைப்படம் இதுவரை 8 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
 
அதேபோல் இரண்டாம் குத்து திரைப்படம் இதுவரை 3 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இரண்டு படங்களுமே எதிர்பார்த்த வசூல் கிடைக்கவில்லை என்றும் ஓடிடியில் ரிலீஸ் செய்திருந்தால் கூட இதைவிட அதிக தொகை வந்திருக்கும் என்று திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யாவின் ‘கருப்பு’ படத்தின் ஒரே தடையும் நீங்கியது.. இந்த தேதியில் ரிலீசா?

திடீரென அமெரிக்கா சென்ற சிவகார்த்திகேயன்.. அட்லி படம் போல் பிரமாண்டம்..!

இன்று வெளியாக இருந்த பாலைய்யாவின் ‘அகண்டா 2’ திடீர் ஒத்திவைப்பு.. நிதி சிக்கலா?

அஜித் படத்தை மீண்டும் இயக்குகிறாரா சிறுத்தை சிவா? மலேசியாவில் திடீர் சந்திப்பு..!

சமந்தா அணிந்திருந்த அந்த மோதிரம் இத்தனை கோடியா? அடேங்கப்பா!

அடுத்த கட்டுரையில்
Show comments