அஜித் படத்திற்கு முன் ஒரு படம்: சுதா கொங்கரா திட்டம்!

Webdunia
திங்கள், 16 நவம்பர் 2020 (18:07 IST)
சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடித்த சூரரைப்போற்று திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சுதாவின் திரைக்கதைக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது 
 
இந்த நிலையில் சுதாவின் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தில் அஜீத் நடிக்க இருப்பதாகவும் இந்த படம் அடுத்த ஆண்டு தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கூட தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் அஜீத் தற்போது வலிமை படத்தில் நடித்துக் கொண்டிருப்பதால் அந்த படத்தை முடித்துவிட்டு வருவதற்கு இன்னும் ஒரு சில மாதங்கள் ஆகும் என்பதால் அதற்கு முன் ஒரு குறுகிய கால திரைப்படத்தை எடுக்க சுதா கொங்காரா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் கார்த்தி நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
இந்த படம் குறித்த தகவல்கள் மிக விரைவில் விரைவில் வெளிவரும். இந்த படத்தை இரண்டே மாதங்களில் முடிக்க சுதா திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான ஆந்தாலஜி குறும்படம் நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளீன் ஷேவ் லுக்கில் சிவகார்த்திகேயன்! அடுத்த படத்துக்கு ரெடியாயிட்டாரே

கல்கி 2898 AD படத்தில் இருந்து தீபிகா படுகோன் நீக்கம்.. தீபிகா கேரக்டரில் யார்?

ஃபிளாப்பான படத்தை 31 வருஷம் கழிச்சு எடுத்து ஹிட்டாக்கிய ஏவிஎம் சரவணன்.. என்ன படம் தெரியுமா?

கார்த்தியின் 'வா வாத்தியாரே' பட வெளியீட்டுக்கு நீதிமன்றம் தடை! நாளை வெளியாக இருந்த நிலையில் சிக்கல்..!

என்னை வைத்து சண்டை போடுவதற்கு நீ யார்? பார்வ்தி - கம்ரூதீன் சண்டை..!

அடுத்த கட்டுரையில்
Show comments