விஜய் இரண்டு வேடங்களில் நடித்து வரும் 'பிகில்' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்புகள் இம்மாத இறுதிக்குள் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் இந்த படத்தில் அப்பா விஜய் கேரக்டர் பெயர் பிகில் என்பதும் இவர் உள்ளூர் தாதா என்றும், அதேபோல் மகன் விஜய் கேரக்டர் பெயர் மைக்கேல் என்பதும், அவர் பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளர் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் விஜய் வாழும் பகுதியின் பெயர் குறித்த தகவல் தற்போது தெரியவந்துள்ளது. 'சமாதானபுரம்' என்பதுதான் விஜய்யின் சொந்த ஊர் என இந்த படத்தில் காட்டப்படுகிறது. அதாவது அனைத்து இன மக்களும் சமாதானமாக வாழும் பகுதி என்பதால் அந்த பகுதிக்கு விஜய்யே சமாதானபுரம் என மாற்றியதாகவும் கதையில் உள்ளதாம்
மேலும் இந்த படத்தில் பிகில் கேரக்டர் ஆழமான அரசியல் வசனங்களை பேசும் கேரக்டர் என்றும், அவருடைய வசனத்தால் தற்போது ஆளும் அரசியல்வாதிகள் பலர் எரிச்சலடைய வாய்ப்பு இருப்பதாகவும் அதனால் இந்த படத்திற்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது. அதேபோல் மைக்கேல் கேரக்டர் விளையாட்டு துறையில் உள்ள அரசியல் குறித்த வசனங்களை பேசவிருப்பதாகவும், இந்த வசனங்கள் விளையாட்டு துறையில் உள்ள உயரதிகாரிகளை குறி வைக்கும் அளவுக்கு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மொத்தத்தில் வரும் தீபாவளி அன்று வெளியாகும் இந்த படம் பலரது தூக்கத்தை கெடுக்கும் என்பது மட்டும் உண்மை