Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அவளை கொல்லாம விட மாட்டேன் - பிக்பாஸ் போட்டியாளருக்கு கொலை மிரட்டல்

Advertiesment
Bigg Boss Tamil Season 3
, ஞாயிறு, 30 ஜூன் 2019 (15:42 IST)
விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கோலாகலமாக தொடங்கியிருக்கிறது.

100 நாட்கள் ஒரே வீட்டுக்குள் இருக்கும் பிரபலங்களில் சித்தப்பு சரவணன், ஷெரின், பாத்திமா, லோஸ்லியா என பலர் உள்ளனர். அதில் முக்கியமானவர் முன்னாள் அழகி மீரா மிதுன். இவர் தனது தென்னிந்திய அழகி பட்டத்தை தவறாக பயன்படுத்தியதாக கூறி அந்த பட்டம் இவரிடமிருந்து பறிக்கப்பட்டது.

அதற்கு பிறகு இவர் தனியாக தென்னிந்திய அழகி போட்டி நடத்த முடிவு செய்தபோது பலவிதமான எதிர்ப்புகளை சந்தித்தார். தற்போது பிக்பாஸ் போட்டியாளராக கலந்து கொண்டுள்ள இவருக்கு மர்ம நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்திருப்பதாக மீரா மிதுனின் அம்மா போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

கொலை மிரட்டல் விடுத்தவர் கேராளவை சேர்ந்தவர் என்றும், தன் மகள் பிக்பாஸில் கல்ந்து கொள்வதை தடுக்க இவ்வாறு மிரட்டல் விடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடுத்தடுத்து தோல்வி : மீண்டும் ஹிட் கொடுக்க துடிக்கும் சூர்யா !