Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அம்மம்மாவின் இழப்பு ... பிகில் இந்திரஜாவின் உருக்கமான பதிவு!

Advertiesment
அம்மம்மாவின் இழப்பு ...  பிகில் இந்திரஜாவின் உருக்கமான பதிவு!
, வியாழன், 14 மே 2020 (09:58 IST)
பாடி பில்டராக இருந்து பிறகு மேடை காமெடியனாக தனது பயணத்தை ஆரம்பித்த நடிகர் ரோபோ ஷங்கர் தனது கடின உழைப்பின் மூலம் தற்போது சினிமாவில் பிரபலமான காமெடியனாக வலம் வருகிறார். பிரியங்கா என்ற ஒரு நடன கலைஞரை காதலித்து 2002 இல் திருமணம் செய்துகொண்ட இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

அதில் முத்த மகள் தான் இந்திரஜா. இவர் தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த பிகில் படத்தில் பெண்கள் கால்பந்து குழுவில் பாண்டியம்மா ரோலில் நடித்து புகழ்பெற்றார். மகளின் வெற்றியை கண்டு ரோபோஷங்கர் மனம் நெகிழ்ந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். இதற்கிடையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தான் ரோபோ சங்கரின் மாமியார் மரணம் அடைந்தார். எதிர்பாராத இந்த இழப்பால் அந்த குடும்பம் மிகுந்த சோகத்தில் மூழ்கியது.

webdunia

இந்நிலையில் இன்று தனது பாட்டியின் பிறந்தநாளில் இந்திரஜா உருக்கமான பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் பாட்டியின் போட்டோவை வெளியிட்டு " வருஷா வருஷம் நான் தான் உனக்கு சர்ப்ரைஸ் கொடுப்பேன். ஆனால், இந்த வருஷம் நீ எனக்கு பெரிய சர்ப்ரைஸ் கொடுத்துட்ட... வாழ்த்து சொல்வதற்கு கூட நீ என்கூட இல்லையே அம்மத்தா லவ் யு என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இதென்னடா தேவதைக்கு வந்த சோதனை... பாடிக்கொண்டே துணி துவைக்கும் ரித்திகா சிங் - வீடியோ!