’பிகில்’ ஆடியோ ரிலீஸ் தேதி: ரசிகர்களை சொக்க வைக்கும் ரஹ்மான்

வியாழன், 12 செப்டம்பர் 2019 (06:47 IST)
தளபதி விஜய் நடித்து முடித்துள்ள ’பிகில்’ திரைப்படத்தின் ஆடியோ ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று படக்குழுவினர் கூறிய நிலையில் தற்போது இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ’பிகில்’ படத்தின் ஆடியோ வரும் செப்டம்பர் 19ஆம் தேதி ரிலீஸாகும் என அர்ச்சனா கல்பாதி அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் 
 
 
மேலும் ஒவ்வொரு ஆண்டும் தான் விஜய் படத்தின் ஆடியோ விழாவில் அவருடைய பேச்சை ரசிக்க ஆவலுடன் காத்திருப்பேன் என்றும், அந்த வகையில் இந்த ஆண்டும் வரும் 19ஆம் தேதி நான் மட்டுமின்றி கோடிக்கணக்கான விஜய் ரசிகர்களும் அவருடைய அற்புதமான பேச்சை கேட்டு ரசிக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
 
மேலும் இந்த இசை வெளியீட்டு விழாவில் ஏ.ஆர் ரஹ்மான் அவர்களுடன் உலகில் உள்ள திறமையான இசைக்கலைஞர்கள் இணைந்து இசை விருந்து அளிக்க உள்ளார்கள் என்றும் இதனை நேரில் கண்டு ரசிக்க அனைவரும் ஆவலுடன் தயாராக இருங்கள் என்றும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அவருடைய டுவீட் தற்போது உலக அளவில் டிரெண்ட் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய்,  நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு, கதிர், விவேக், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ்,  இந்துஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் வரும் தீபாவளி அன்று வெள்ளித்திரையில் வெளியாகவுள்ளது

We have planned a truly special event with @arrahman Sir’s amazing musical and some beautiful performances by a team of world class artists and technicians @actorvijay @Atlee_dir @SonyMusicSouth @Ags_production #Bigil #ExpectTheUnexpected #BigilDiwali

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் இவருக்கு பேருதான் பேச்சிலரா?? – ஜி.வி.பிரகாஷ் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்