Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கண் தான அறிவிப்பை வெளியிட்ட பிரபலம்!

Advertiesment
அனிதா
, வெள்ளி, 3 செப்டம்பர் 2021 (10:20 IST)
பிக் பாஸ் தமிழ் சீசன் 4 கடந்த ஜனவரி மாதம் முடிவடைந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் அனிதா. தற்போது இவர் பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் நிலையில் தனது கண் தான அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
விஜய் டிவியில் தற்போது பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது என்பதும் இதில் அனிதா மற்றும் ஷாருக் ஜோடி மிக அபாரமாக நடனமாடி நடுவர்களையும் ரசிகர்களையும் கவர்ந்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த வாரத்தில் ’மீண்டும் பள்ளிக்கு போகலாம்’ என்ற சுற்றில் அனிதா மற்றும் ஷாருக் ஆகிய இருவரும் பார்வையற்றவர்கள் ஆக நடித்து நடனமாடினார். அவர்களது நடனத்தை மிகப்பெரிய பாராட்டுதல் நடுவர்கள் மூலம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நடன நிகழ்ச்சி முடிந்ததும் அனைவரும் கண்தானம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாகவும் அதை முன்னிறுத்திக் கொள்ளும் வகையில் நானே முதல் நபராக கண் தானம் செய்கிறேன் என்றும் அனிதா அறிவித்துள்ளார் இதனை அடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகை மீராமிதுன் மீண்டும் கைது!