Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாங்கல்லாம் ஒன்னானோம் கக்கூஸ் கழுவி friend ஆனோம் - தலைவி பிரியங்கா இறங்கிட்டாங்க!

Advertiesment
Bigg Boss 4
, திங்கள், 4 அக்டோபர் 2021 (11:17 IST)
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கியது என்பதும் இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.  சமூக வலைதளங்கள் மற்றும் இணையதளங்களில் கூறிய பல போட்டியாளர்கள் நேற்றைய நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. 
 
இருந்தும் அதை விட காமெடியில் தூள் கிளப்ப பிரியங்கா ஒரு ஆளே போதும் என்கிற வகையில் வேற லேவெல performance கொடுத்து வருகிறார். இந்நிலையில் சற்றுமுன் வெளியாகியுள்ள ப்ரோமோ வீடியோவில் இந்த வார தலைவர் பதவிக்கு தகுதியானவர் என நினைக்கும் 5 பேர் தாங்களாகவே முன் வந்து எந்தெந்த டிபார்ட்மென்ட் தலைவர் என்பதை கூறுகிறார். 
 
அதில் முதல் ஆளாக ராஜூ ஜெயமோகன் நான் பாத்ரூம் கழுவுறேன் என கூற உடனே பின்னாடி இருந்த பிரியங்கா, இருக்குறதுலே அதான் ஈஸியான வேலை. நாங்க எல்லாம் ஒன்னானோம் பாத்ரூம் கழுவி Friend ஆனோம் என செம பஞ்சுடன் ப்ரோமோவை கலகலப்பா முடித்தார். இந்த சீசனில் பிரியங்கா மற்றும் ராஜுவின் கம்போ காமெடி செம கலாட்டாவா இருக்கும் அவர்கள் இருவருக்கும் விரைவில் ஆர்மி உருவாவது நிச்சயம். என் தலைவி பிரியங்கா இருக்குற வரைக்கும் காமெடிக்கு பஞ்சம் இருக்காது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் படத்தில் மகேஷ் பாபுவா? ரசிகர்களுக்கு ஷாக்கிங் சர்ப்ரைஸ்!