Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Thursday, 24 April 2025
webdunia

மீண்டும் விஜய் டிவியில் லாஸ்லியா - வெளியான ப்ரோமோ வீடியோ!

Advertiesment
Bigg boss losliya
, வியாழன், 24 செப்டம்பர் 2020 (12:14 IST)
கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளர்களை ஒருவரான லாஸ்லியாவுக்குத்தான் முதன் முதலாக ஆர்மி தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. லாஸ்லியாவின் ஆர்மி அவரது புகழை பாடிக்கொண்டு லாஸ்லியாவை தினந்தோறும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆக்கிக் கொண்டிருந்தனர்.

பிக்பாஸில் கிடைத்த புகழை வைத்து லாஸ்லியா தமிழில் கதாநாயகியாக பிரண்ட்ஷிப் படத்தில் நடித்து வருகிறார். அத்துடன்  நடிகர் ஆரிக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும், அறிமுக நாயகன் ஒருவருக்கு ஜோடியாக புதுப்படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்நிலையில் பிக்பாஸ் 3வது சீசனில் பங்குபெற்ற லாஸ்லியா, அபிராமி, பாத்திமா பாபு, வனிதா விஜயகுமார், சக்ஷி அகர்வால், ரேஷ்மா உள்ளிட்டோர் விஜய் டிவி நடத்தும் ஸ்டார் மியூசிக் என்ற புதிய நிகழ்ச்சியில் பங்கேற்று விளையாடினர்.

அப்போது லாஸ்லியா அதிகபட்சத் தொகையாக ரூ. 1 லட்சம் வென்று மகிழ்ச்சி அடைந்தார்.  இந்த ப்ரோமோ வீடியோ சமூகவலைத்தளத்தில் வெளியாக "ரொம்ப lucky girl போலயே இவங்க" என கூறி அனைவரும் லாஸ்லியாவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

க/பெ. ரணசிங்கம் படத்தின் பறவைகளா பாடல் வீடியோ ரிலீஸ்