Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கவின் படத்தில் இருந்து விலகிய அனிருத்… படத்தின் தற்போதைய நிலை!

கவின் படத்தில் இருந்து விலகிய அனிருத்… படத்தின் தற்போதைய நிலை!
, வெள்ளி, 28 ஏப்ரல் 2023 (08:02 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கவனம் ஈர்த்தவர் சீரியல் நடிகர் கவின். அதன் பின்னர் பெரியத்திரையில் கவனம் செலுத்திய அவர் லிப்ட் உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகனாக நடித்தார். அதையடுத்து சமீபத்தில் அவர் நடித்துள்ள டாடா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. படத்தில் சில பிரச்சனைகள் மற்றும் உணர்வு சுரண்டல் காட்சிகள் இருந்தாலும், ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. அதிலும் நகர்ப்புறங்களில் மல்டிப்ளக்ஸ் ரசிகர்களை இந்த படம் வெகுவாகக் கவர்ந்துள்ளது.

இதையடுத்து கவின், இப்போது தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களின் விருப்ப நடிகர்களில் ஒருவராகியுள்ளார். இந்நிலையில் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில், நடன இயக்குனர் சதீஷ் இயக்குனராக அறிமுகமாகும் முதல் படத்தில் கவின் நடிக்க ஒப்பந்தம் அகியுள்ளாராம். இந்த திரைப்படமும் காதல் கதைக்கு முக்கியத்துவம் உள்ள படம் என சொல்லப்படுகிறது.

இந்த படம் பற்றி வெளியான தகவல்களில் அனிருத் இந்த படத்துக்கு இசையமைக்கிறார் என்பதுதான் அதிக கவனத்தைப் பெற்றது. தற்போது முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் படங்களுக்கு மட்டும்தான் அனிருத் இசையமைத்து வருகிறார் என்பதால் ஆச்சர்யமாக பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது படத்தில் இருந்து அனிருத் விலகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த படத்தை இப்போதைக்கு தொடங்குவது போல தெரியவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மண்டமான பட்ஜெட்டில் உருவாகும் லோகேஷ் நடிக்கும் படம்…!