Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

லாஸ்லியா படத்தில் இணைந்த அபிராமி - ஆக ஆரிக்கு மொத்தம் மூன்று பேர்...!

Advertiesment
லாஸ்லியா படத்தில் இணைந்த அபிராமி - ஆக ஆரிக்கு மொத்தம் மூன்று பேர்...!
, புதன், 12 பிப்ரவரி 2020 (13:07 IST)
கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளர்களை ஒருவரான லாஸ்லியாவுக்குத்தான் முதன் முதலாக ஆர்மி தொடங்கப்பட்டது. லாஸ்லியாவின் ஆர்மி அவரது புகழை பாடிக்கொண்டு லாஸ்லியாவை தினந்தோறும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆக்கிக் கொண்டிருந்தனர். இலங்கையில் செய்திவாசிப்பாளராக இருந்த இவர் தமிழ் இளைஞர்களின் கனவுக்கன்னியாக மாறிவிட்டார். 
 
பிக்பாஸில் லாஸ்லியா- கவின் காதல் தான் சூடு பிடித்து நிகழ்ச்சியை ஸ்வாரஸ்யமாக எடுத்து சென்றது. இவர்களின் காதலுக்கு அவர்களது ஆர்மிஸ் பெரும் ஆதரவு கொடுத்தனர். பின்னர் இந்நிகழ்ச்சிக்கு பிறகு முதல் முறையாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக கால் பதிக்கவிருக்கிறார் லாஸ்லியா. அதுவும் நடிகர் ஆரிக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் மற்றுமொரு கதாநாயகியாக ஸ்ருஷ்டி டாங்கே நடிக்கிறார் என்ற தகவல் சமீபத்தில் வெளியாகியிருந்தது. 
 
இந்நிலையில் சற்றுமுன் இப்படத்தில் இன்னொரு கதாநாயகியாக பிக்பாஸ் அபிராமி நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மூன்று பிரபலமான நடிகைகள் ஒரே படத்தில் இறங்கியுள்ளதால் நிச்சயம் இப்படம் வேறுமாதிரி ஹிட் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. லாஸ்லியா ஹர்பஜன் சிங்கிற்கு ஜோடியாக பிரண்ட்ஷிப் என்ற மற்றொரு படத்தில் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.


Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழக அரசுக்கு எதிராக விஷாலின் வழக்கு: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு