Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தொப்புள் கொடி உறவை விட பாசம் பிய்த்துக்கொண்டு வருது - எமோஷனல் ப்ரோமோ!

Advertiesment
தொப்புள் கொடி உறவை விட பாசம் பிய்த்துக்கொண்டு வருது - எமோஷனல் ப்ரோமோ!
, வியாழன், 29 அக்டோபர் 2020 (09:25 IST)
குடும்ப உறவுகளை விட்டுவிட்டு பிக்பாஸ் வீட்டிற்கு வந்துள்ள போட்டியாளர்கள் எந்த உறவை மிஸ் செய்யும்போது இங்கிருக்கும் போட்டியாளர்கள் யார் அந்த உறவை நியாபகப்படுகிறார்கள் என்று பிக்பாஸ் கேட்க அதற்கு ஆளாளுக்கு கண்ணீருடன் தங்களது தங்களது உறவை நினைவு கூறுகிறார்கள்.

அப்படியாக அர்ச்சனா தன் அம்மாவை நியப்படுத்துவதாக கூறி ரம்யா பாண்டியன் கண்ணீர் விட்டு கதறி அழுகிறார். இதேபோல் பாலாஜியை பார்க்கும்போது என் மகன் நியாபகத்திற்கு வருகிறான் என சுரேஷ் கூறி கண்கலங்கினார். இதையெல்லாம் பார்ப்பதற்கு, தன் கூட பிறந்தவளின் குழந்தையை ஒரு சித்தியோ பெரியம்மாவோ எடுத்து வளர்த்தாலே மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடந்துக்கொள்கிறார்கள்.

இங்கு பார்த்த உடனே மூன்று வாரத்திற்குள் தொப்புள் கொடி உறவை விட அதிகமாக பாசம் பிய்த்துக்கிக்கொண்டு வந்துவிடுகிறது. 20 வருஷமா வேறு யாரிடமும் வராத அந்த தாய்ப்பாசம் 15 நாளில் பீர் பாலா மீது பீறிட்டு எப்படி வந்தது. கேட்கிறவன் கேன பையனா இருந்தா கேப்ரியல்லா காதலன் கஞ்சா கருப்பு னு சொல்லுவீங்கடா என்று நெட்டிசன்ஸ் நக்கல் அடித்துவருகின்றனர். இருந்தாலும் ப்ரோமோ டச்சிங்கா இருந்துதுப்பா.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எல்லாமே வதந்தி… சித்தி 2 சீரியல் முடிவு பற்றி பேசிய ராதிகா!