Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வெளியில் இருக்குறவங்க செருப்பால அடிப்பாங்க - ஆவேசப்பட்ட நிஷா!

Advertiesment
bigg boss 4
, வியாழன், 22 அக்டோபர் 2020 (12:30 IST)
இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரோமோ சற்றுமுன் வெளியாகியுள்ளது. இதில் போட்டியாளர்கள் இரண்டு கோஷ்டியினராக பிரித்து "பிக்பாஸ் வீடு ஒரு ஆனந்த குடும்பம் - பிக்பாஸ் ஒரு போட்டி களம்" என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடத்துகின்றனர்.

இதில் ஆனந்த குடும்பத்தில் வேல்முருகன் முதலாவதாக பேசுகிறார். அப்போது அனிதா அவருக்கு எதிர்ப்பாளராக தன்னுடைய கருத்தினை முன்வைக்கிறார். பின்னர் ரியோ பிக்பாஸ் ஒரு போட்டி களம் என்று கூறி " எல்லோரும் தேவைக்காக தான் இந்த போட்டி களத்திற்குள் வந்துள்ளோம் என கூறினார்.

கடைசியாக பேசிய நிஷா யாரையோ மனதில் வைத்துக்கொண்டு இஷ்டத்துக்கும் அடித்து விடுகிறார். அதிலும் "புறணி பேசுவது அழகு. ஒருவரின் உருவத்தையும் உள்ளத்தையும் உடைக்கும் போது தான் அந்த புறணி அசிங்கம். அதைத்தான் வெளியில் இருப்பவர்கள் செருப்பால் அடிப்பாங்க என மறைமுகமாக தாக்கி பேசுகிறார். ஆடியன்ஸ் பொறுத்தவரை பிக்பாஸ் வீடு ஆனந்த குடும்பமும் இல்ல போட்டி களமும் இல்ல.  இது ஒரு அமுக்கு டுமுக்கு டாமால் டுமீல் வீடு... அதைத்தான் மக்கள் எதிர்ப்பார்க்கிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அழகே பொறாமைப்படும் பேரழகி... பிக்பாஸ் அபிராமியின் கலக்கல் போட்டோஸ்!