Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிக்பாஸ் 4 தொகுப்பாளர் இவர் தான் - தேதியுடன் அறிவித்த எண்டிமால் நிறுவனம்!

பிக்பாஸ் 4 தொகுப்பாளர் இவர் தான் - தேதியுடன் அறிவித்த எண்டிமால் நிறுவனம்!
, சனி, 27 ஜூன் 2020 (07:40 IST)
கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழ் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பிக்பாஸ் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியின் அடையாளமாக மாறியுள்ளார். அவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விதம் ரசிகர்களிடையே மிகப்பெரிய ஆதரவைப் பெற்றுள்ளது.
 
இந்நிலையில் ஜூன் மாதம் ஒளிபரப்பாக இருந்த பிக்பாஸ் சீசன் 4 கொரோனா லாக்டவுனால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்னும் அதற்கான எந்த ஒரு திட்டமும் சம்மந்தப்பட்ட நிறுவனம் எடுக்காததால் பிக்பாஸ் 4 சீசனை கமல் தொகுத்து வழங்க மாட்டார் என்றெல்லாம் தகவல் வெளியானது.
 
சமீபத்தில் இது குறித்து விளக்கமளித்துள்ள நெருங்கிய வட்டாரம், இப்பொழுது தான் கொரோனா ஊரடங்கில் சற்று தளர்வு ஏற்பட்டு சீரியல் ஷூட்டிங் நடத்துவதற்கான அனுமதி வழங்கியுள்ளனர். எனவே கூடிய விரையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான திட்டம் போட்டு வேலைகள் துவங்கும் என கூறினர்.
 
இந்நிலையில் தற்ப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் தயாரிப்பு நிறுவனமான "எண்டிமால் நிறுவனம்" ஜூலையில் ஒளிபரப்பு தொடங்கிடவிடலாம் என்று நினைத்தோம். ஆனால், தற்போது இருக்கிற சூழலுக்கு சாத்தியப்படாது . எனவே கொரோனா லாக்டவுன் ஆகஸ்ட்டுக்குள் முடிவுக்கு வந்துவிடும் என நம்புவதால் செப்டம்பரில் ஒளிபரப்பைத் தொடங்கலாம் என்று திட்டமிட்டுள்ளோம். எனவே விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல்கள் வரும். பிக்பாஸ் 4 நிகழ்ச்சியை நிச்சயம் கமல் சார் தான் தொகுத்து வழங்குவார் என்று ஆணித்தரமாக தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’’இருவருக்கு’’ நடந்த கொடூரத்தை கேட்டு அதிர்ச்சியடைந்தேன்’ – மாஸ்டர் பட நடிகை