Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிக்பாஸில் இருந்து விலகுகிறாரா கமல்? அடுத்த தொகுப்பாளர் இந்த நடிகரா..?

பிக்பாஸில் இருந்து விலகுகிறாரா கமல்?  அடுத்த தொகுப்பாளர் இந்த நடிகரா..?
, செவ்வாய், 27 ஆகஸ்ட் 2019 (10:51 IST)
இந்தி , தெலுங்கு , கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017ம் ஆண்டு தமிழில் ஒளிபரப்பாகியது. உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சி மக்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்றதையடுத்து சீசன் 2 , சீசன் 3 என தொடர்ச்சியாக கமல் தான் தொகுத்து வழங்கி வருகிறார். 


 
அந்த வகையில் இந்தி பிக்பாஸை தொகுத்து வழங்கி வரும் சல்மான் கானை அடுத்து கமல் தான் தொடர்ந்து அடுத்தடுத்து 3 சீசன்களையும் தொகுத்து வழங்கி வருகிறார். ஆனால், தற்போது ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் இந்த 3-வது சீசன் தான் கமல் தொகுத்து வழங்கும் கடைசி சீசனாம். ஆம் பிக்பாஸ் நான்காவது சீசனில் இருந்து கமல் வெளியேற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
மேலும், 4-வது சீசனை நடிகர் சிம்பு தொகுத்து வழங்கவுள்ளதாக அலசல் புரசலாக பேசப்பட்டு வருகிறது.   ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. அதுமட்டுமின்றி நடிகர் சிம்பு  விஜய் டிவிக்கு ஒன்றும் புதிதானவர் கிடையாது. அவர் ஏற்கனவே ஜோடி நிகழ்ச்சியில் நடுவராக ப்மங்கேற்றுள்ளார். மேலும், விஜய் டிவி நடத்திய பல்வேறு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகவும் சென்றுள்ளார். எனவே, சிம்பு பிக்பாஸ் 4வது சீசனை  தொகுத்து வருவதற்கும் பெரும்பாலான வாய்ப்பும் இருக்கிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கிராமத்து டாஸ்க்!