Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மஞ்சிமா மோகனுக்கு திடீர் விபத்து - சற்றுமுன் வெளியிட்ட பரிதாப புகைப்படம்!

மஞ்சிமா மோகனுக்கு திடீர் விபத்து - சற்றுமுன் வெளியிட்ட பரிதாப புகைப்படம்!
, சனி, 19 அக்டோபர் 2019 (15:32 IST)
நயன்தாரா , ஓவியா, அமலா பால் போன்று கேராவில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்த பல நடிகைகள் இன்று முன்னணி நடிகையாக வளர்த்துள்ளனர். அந்த லிஸ்ட்டில்  இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்வு நடிப்பில் வெளியான "அச்சம் என்பது மடமையடா" என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் மஞ்சிமா மோகன்.  


 
பப்ளியான தோற்றத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார். அதையடுத்து நடிகர் உதயநிதி நடிப்பில் வெளியான "இப்படை வெல்லும்" சத்ரியன், தேவராட்டம் என ஒரு சில படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு பரீட்சியமான நடிகையாக பார்க்கப்பட்டார். 
 
இந்நிலையில் மஞ்சிமா தனது இன்ஸ்டாகிராமில் ஒரு சோகமான பதிவை பதிவிட்டுள்ளார், சில வாரங்களுக்கு முன்பு என் வாழ்க்கையில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது, அதையடுத்து  ஒரு சின்ன ஆப்ரேஷன் நடந்தது. இதனால் ஒரு மாதம் படுக்கையில் கிடந்தேன். இந்த நிலைமை என்னை மாற்றிவிட்டது. மேலும் என்னை ஒரு வலிமையான நபராக்கியது. தற்போது walking aids வைத்து நடக்க முடிகிறது.  "எல்லாம் ஒரு காரணத்திற்காக நடக்கிறது, இதுவும் கடந்து போகும்." என பதிவிட்டுள்ளார். மஞ்சிமாவின் நிலையை அறிந்த அவரது ரசிகர்கள் அவருக்கு ஆறுதலான வார்த்தைகளை கூறி வருகின்றனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சினிமாவுக்கு குட் பை...பாக்சிங்கில் ரீ என்ட்ரி!