Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிக்பாஸ் பிரபலம் மருத்துவமனையில் அனுமதி !

Advertiesment
பிக்பாஸ் பிரபலம்  மருத்துவமனையில் அனுமதி !
, சனி, 10 ஜூலை 2021 (23:48 IST)
விஜய் மற்றும் ஜீ தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியவர் அர்ச்சனா. இவர் விஜேவாக மட்டுமின்றி கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்களை ஈர்த்தார்.

இந்நிலையில், இவர் இன்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு முக்கிய தகவல் வெளியிட்டுள்ளார்.

அதில், தனக்கு மூளை நரம்பியல் அறுவைச் சிகிச்சை செய்யப்பட இருப்பதாகவும்,                   என் இதயத்தைக் கேட்டு மூளை வேலை செய்ததால் இதயத்தை விட மூளை புத்திசாலி என்பதை வெளிக்காட்ட முயற்சி செய்துள்ளது. அதனால் என் மூளை அருகே சிறிய பிரச்சனை உண்டாகியுள்ளது. இதற்கான சிறிய அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள வுள்ளேன். நான் விரைவில் இந்த அறுவைச் சிகிச்சை முடிந்து வருவேன் எனத் தெரிவித்துள்ளார்.

அவர் விரைவில் குணம்பெற்று வரவேண்டுமென ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வீரமே வாகை சூடும்….கமல்ஹாசன் டுவீட்