Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உதயநிதி படத்தில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்

உதயநிதி படத்தில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்
, செவ்வாய், 27 ஏப்ரல் 2021 (23:49 IST)
தமிழில் ரீமேக் ஆகும் ஆர்ட்டிகிள் 15 படத்தில் நடிகர் ஆரி ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
 

இந்தியில் ஆயூஸ்மான் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த ஆர்ட்டிகிள் 15 படத்தின் தமிழ் ரீமேக்கில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க கனா இயக்குனர் அருண்ராஜா காமராஜா இயக்க இருந்தார். அந்த படம் தேர்தல் காரணமாக தொடங்கப்படாமல் இருந்த நிலையில் இப்போது படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. இந்த படத்தை போனி கபூர் தயாரிக்க, கனா இயக்குனர் அருண் ராஜா காமராஜ் இயக்க உள்ளார்.

இந்நிலையில் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் பற்றிய விவரம் சமீபத்தில்  வெளியானது. அதில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமான சிவாங்கி ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது.

தற்போது பிக்பாஸ் பிரபலம் இப்படத்தில் இணைந்துள்ளார். நடைபெற்று முடிந்த பிக்பாஸ் சீசனில் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்ட ஆரி, உதயநிதியுடன் இணைந்து நடிக்கவுள்ளார்.
webdunia

இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் பொள்ளாச்சியில் தொடங்கப்பட்ட நிலையில்,  உற்சாகத்துடன் உதயநிதி கலந்து கொண்டிருக்கிறார். பெயரிடப்படாத இப்படத்திற்கு ஆரி வருகையால் மேலும் எதிர்பார்ப்பு கூடியுள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரசிகர்கள் திட்டும்போது வலித்தது..இப்போது......தனுஷ் பட நடிகர் டுவீட்