Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உதயநிதி ஸ்டாலினுக்கு வில்லனாக ஒப்பந்தம் ஆன பிக்பாஸ் பிரபலம்!

உதயநிதி ஸ்டாலினுக்கு வில்லனாக ஒப்பந்தம் ஆன பிக்பாஸ் பிரபலம்!
, திங்கள், 1 மார்ச் 2021 (08:31 IST)
திமுக இளைஞரணிச் செயலாளரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படத்தில் வில்லனாக நடிக்க ஆரவ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கிய தடம் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில் அவர் மீதான கவனம் மற்ற ஹீரோக்களும் ஏற்பட்டுள்ளது. இதனால் விஜய் போன்ற பெரிய ஹீரோக்களே அவரிடம் கதைக் கேட்டுள்ளனர். ஆனால் உதயநிதி ஸ்டாலினிடம் ஏற்கனவே அட்வான்ஸ் வாங்கிவிட்டதால் மகிழ்திருமேனியால் விஜய் படத்தை இயக்க முடியவில்லை. இந்நிலையில் இப்போது உதயநிதி ஸ்டாலினை வைத்து ஒரு படத்தை அவர் இயக்கி வருகிறார்.

தீவிர தேர்தல் பிரச்சாரத்துக்கு இடையிலும் இந்த படத்தில் நடித்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின். இந்த படத்தில் வில்லனாக நடிக்க பிக்பாஸ் புகழ் ஆரவ் ஒப்பந்தம் ஆகியுள்ளாராம். இவர் நடிப்பில் உருவாகிய மார்க்கெட் ராஜா திரைப்படம் விரைவில் ரிலிஸாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மறைத்து வைத்திருந்த சீக்ரெட்டை வெளியிட்ட தனுஷ் பட நாயகி!