Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மறைத்து வைத்திருந்த சீக்ரெட்டை வெளியிட்ட தனுஷ் பட நாயகி!

Advertiesment
மறைத்து வைத்திருந்த சீக்ரெட்டை வெளியிட்ட தனுஷ் பட நாயகி!
, திங்கள், 1 மார்ச் 2021 (08:20 IST)
தமிழில் மயக்கம் என்ன உள்ளிட்ட படங்களில் நடித்த ரிச்சா கங்கோபாத்யாயா தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் இரு துருவங்களாகிய சிம்பு மற்றும் தனுஷூடன் ஒரே நேரத்தில் நாயகியாக நடித்தவர் நடிகை ரிச்சா ரிச்சா கங்கோபாத்யாய். சிம்புவுடன் இவர் நடித்த 'ஒஸ்தி' திரைப்படம் கடந்த 2011ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் தேதி வெளியானது. இந்த படம் வெளியான இரண்டே வாரத்தில் தனுஷுடன் இவர் நடித்த 'மயக்கம் என்ன? திரைப்படம் வெளிவந்தது. இரண்டு படங்களும் வசூல் அளவில் வெற்றி பெறவில்லை என்பதால் அதன்பின் ரிச்சாவுக்கு வேறு தமிழ்ப்பட வாய்ப்பு கிடைக்கவில்லை

இந்த நிலையில் தனது நீண்ட நாள் காதலரான ஜோ என்பவருடன் ரிச்சாவுக்கு 2019 ஆம் ஆண்டு திருமணம் நடந்து தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். இந்நிலையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்ஸ்டாகிராமில் கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கர்ப்பமாக இருப்பதை ’இத்தனை நாளாக சிறிய ரகசியத்தை மறைத்து வைத்திருந்தோம். நானும் என் கணவரும் மிகவும் எதிர்பார்ப்புடன் இருக்கிறோம். லங்கீலா ஜூன் மாதம் பிறக்க உள்ளார். இதயம் முழுவதும் மகிழ்ச்சியுடன் இருக்கிறோம். எங்களால் காத்திருக்க முடியவில்லை’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திரைப்படத்தில் கதாநாயகியாக வனிதா விஜயகுமார்… ஹீரோ யார் தெரியுமா?