Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நம் உறவுக்கு வயதில்லை… வாழ்த்துக்கள்டா – பாரதிராஜா பதிவு!

Advertiesment
நம் உறவுக்கு வயதில்லை… வாழ்த்துக்கள்டா – பாரதிராஜா பதிவு!
, புதன், 2 ஜூன் 2021 (12:13 IST)
இசைஞானி இளயராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் நெருங்கிய நண்பர் பாரதிராஜா வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் 1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி படம் மூலம் அறிமுகமான அன்றிலிருந்து சுமார் 25 ஆண்டுகளுக்கு தனது இசையால் ராஜ்ஜியம் நடத்தி வந்தவர் இளையராஜா. ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு இளையராஜா பாடலைக் கேட்காமல் நம்மால் அந்த நாளைக் கடக்க முடியாது எனும் சொல்லும் அளவுக்கு தமிழ் மக்களின் வாழ்வில் நிறைந்திருப்பவர் இளையராஜா.

இளையராஜாவின் திரைவாழ்க்கையிலும் திரைக்கு வெளியிலும் இப்போது அவரை வாடா போடா என்று கூப்பிடும் ஒரே ஆள் பாரதிராஜாதான். அவர்களுக்குள் எத்தனையோ முறை கருத்துவேறுபாடுகள் இருந்தாலும், அதையெல்லாம் மீறி இன்றும் அவரகளின் நட்பு தொடர்கிறது. இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் இளையராஜாவுக்கு பாரதிராஜா தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

தனது முகநூல் பக்கத்தில் ‘
உனக்கும்
உன் இசைக்கும்
 நம் நட்புக்கும்
வயதில்லை
வாழ்த்துகள்டா
உயிர்த்தோழன்
உன் பாரதிராஜா’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முன்னணி நடிகர் மற்றும் தயாரிபபாளர் மரணம்!