Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடிகர் மாதவன் பிறந்தநாள்....குவியும் வாழ்த்து...

நடிகர் மாதவன் பிறந்தநாள்....குவியும் வாழ்த்து...
, செவ்வாய், 1 ஜூன் 2021 (18:28 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர் மாதவன். இவர் இன்று தனது 52 வது பிறந்தநாள் கொண்டாடி வருகிறார். அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் சினிமாவில் மணிரத்னம் இயக்கத்தில் அலைபாயுதே படத்தில் அறிமுகம் ஆனவர் மாதவன். இவர் ரன், எதிரி, விக்ரம் வேதா, மாறா உள்ளிட்ட படங்களில் நடித்து தனது திறமையை நிரூபித்தார்.

இவருக்கு தமிழைப் போலவே இந்தியில் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

தற்போது, ராக்கெட்ரி என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார்.  இப்படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று தனது 52  அது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இவருக்கு ரசிகர்கள் வாழ்த்துகள் தெரிவித்துவருகின்றனர்.

குறைந்த படங்களே நடித்திருந்தாலும் தனக்கென்று ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள மாதவனுக்கு பெண் ரசிகைகள் அதிகம்.

இந்நிலையில் நடிகர் மாதவன் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு சினிமா நட்சத்திரங்கள், ரசிகர்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் பட இயக்குநரின் அடுத்த ஹீரோ இவர்தான் !