Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உடல்நிலை தேறி மீண்டும் ஷூட்டிங்கில் பாரதிராஜா… வெளியான புகைப்படங்கள்!

உடல்நிலை தேறி மீண்டும் ஷூட்டிங்கில் பாரதிராஜா… வெளியான புகைப்படங்கள்!
, வியாழன், 15 டிசம்பர் 2022 (09:50 IST)
இயக்குனர் தங்கர் பச்சான் இப்போது கருமேகங்கள் கலைகின்றன என்ற படத்தை இயக்கி வருகிறார்.


கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இயக்குனர் பாரதிராஜா உடல்நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். பின்னர் அவர் வீட்டுக்கு திரும்பி ஓய்வில் இருந்தார். இந்நிலையில் இரண்டு மாதங்களுக்குப் பிறகு இப்போது அவர் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார்.

இயக்குனர் தங்கர் பச்சான் இயக்கத்தில் யோகி பாபு நடிக்கும் கருமேகங்கள் கலைகின்றன. படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் அவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் புகைப்படங்களை இயக்குனர் தங்கர் பச்சான் பகிர்ந்துள்ளார்.

மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “படபிடிப்பில் ஒரு சிறந்த திரைப்படத்தை உருவாக்குவதற்கே எப்பொழுதும் நான் முனைகின்றேன். இம்முறை சிறந்த தொழில்நுட்பம் மற்றும் நடிப்பு கலைஞர்களுடன் இணைந்து ‘கருமேகங்கள் கலைகின்றன’ எனும் திரைப்படத்தை சிதையாமல் உருவாக்கிட பாடுபடுகின்றேன்.

பாதிக்கு மேல் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் பாரதிராஜாவின் உடல்நலம் குன்றியதால் அனைத்து பணிகளும் கடந்த 130 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் இப்பொழுது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. எண்ணற்ற இடையூறுகளைத் தாண்டி ஒவ்வொரு நாளும் முழுமூச்சுடன் உழைத்துக் கொண்டிருக்கிறோம். உங்கள் அனைவரின் நல்வாழ்த்துகளோடு” எனக் கூறியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாரிசு & துணிவு இரண்டு படங்களுக்கும் நள்ளிரவுக் காட்சிகள்… !