Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எஸ்பிபி-யின் நிலை கண்டு நொறுங்கிப்போன பாரதிராஜா!

Advertiesment
எஸ்பிபி-யின் நிலை கண்டு நொறுங்கிப்போன பாரதிராஜா!
, வெள்ளி, 25 செப்டம்பர் 2020 (13:19 IST)
எஸ்பிபிக்காக பல கோடி பேர் பிரார்த்தனை செய்தும் பலன் கிடைக்கவில்லை என இயக்குனர் பாரதிராஜா வேதனை. 
 
பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதியில் இருந்து கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் சமீபத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்துவிட்டதாகவும் அவருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் நெகட்டிவ் ரிசல்ட் வந்ததாகவும் எஸ்பிபி சரண் அவர்கள் தெரிவித்திருந்தார்.  
 
ஆனால் மீண்டும் அவர் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இநிந்லையில் அவரை சந்திக்க சென்ற பாரதிராஜா, செய்தியாளர்களிடம் வேதனையுடன் பேசினார். 
 
அவர், சில சூழ்நிலைகளில் வார்த்தைகள் வராது. அந்த நிலையில் தான் நான் இருக்கிறேன். இயற்கைக்கு முன் நாமெல்லாம் ஒன்றும் இல்லை. நமக்கு மேலே ஒரு சக்தி உள்ளது. அதன் முடிவு தான் நம் முடிவு. பலன் கிடைக்கும் என பல கோடி பேர் பிராத்தனை செய்தும் பலன் கிடைக்கவில்லை என பேசினார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எஸ்.பி.பி-க்கு என்ன ஆச்சு? மருத்துவமனைக்கு விரைந்த குடும்பத்தார்; போலீஸ் குவிப்பு!