Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Sunday, 13 April 2025
webdunia

தயாரிப்பாளர்களை நோஞ்சான் என சொன்னாரா பாரதிராஜா? அடுத்த சர்ச்சை!

Advertiesment
நடப்பு தயாரிப்பாளர் சங்கம்
, செவ்வாய், 15 செப்டம்பர் 2020 (11:09 IST)
இயக்குனரும் தயாரிப்பாளருமான பாரதிராஜா தயாரிப்பாளர்களை நோஞ்சான் என சொன்னதால் பரபரப்பு எழுந்துள்ளது.

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் முயற்சியால் நடப்பு தயாரிப்பாளர் சங்கம் என்ற புதிய சங்கம் சமீபத்தில் தொடங்கப்பட்டது என்பது தெரிந்ததே. இந்த தயாரிப்பாளர் சங்கத்தில் தற்போது திரைப்படங்கள் தயாரித்துக் கொண்டிருக்கும் தயாரிப்பாளர்கள் மட்டுமே உறுப்பினர்களாக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். நீண்ட காலமாக திரைப்படங்கள் தயாரிக்காமல் இருக்கும் தயாரிப்பாளர்களுக்கு இந்த சங்கத்தில் அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது . இந்த சங்கத்தின் அலுவலகம் திறக்கும் பணி நேற்று நடைபெற்றது.

அப்போது பேசிய பாரதிராஜா வலிமையான வலுவான பயில்வான் மாதிரி நாங்கள் 100 பேர் இருக்கிறோம்.. அவர்களோ நோஞ்சான் மாதிரி 1000 பேர் இருக்கிறார்கள் என சொன்னதாக சொல்லப்படுகிறது. அதில் நோஞ்சான் என்ற வார்த்தை தயாரிப்பாளர்களை அவமானப் படுத்தும் விதமாக இருப்பதாக சர்ச்சை எழ அதற்கு விளக்கமளித்துள்ளார் பாரதிராஜா.

இது சம்மந்தமான பதிவில் ‘வணக்கம், என் பாசத்துக்குரிய தயாரிப்பாளர்களே இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் "நோஞ்சான்"என்கின்ற வார்த்தை நம் சக தயாரிப்பாளர்களைக் காயப்படுத்தும் விதமாகப் பேசியிருப்பதாக ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன்.திரைத் துறையில் முதலாளித்துவமாக இருந்த தயாரிப்பாளர்கள், இன்று யார் யாருக்கோ அடிபணிந்து, ஒடுக்கப்பட்டு செயலற்ற நிலையில் திரியும் அவல நிலையைக் கண்டு கோபத்தில் வெளிவந்த வார்த்தைதான் தவிர வேறு எந்த உள்நோக்கத்துடன் நான் கூறவில்லை.மனதைக் காயப்படுத்தும் விதமாக பேசவேண்டும் என்கிற திட்டமிடுதல் இல்லை. இந்த வார்த்தை நம் தயாரிப்பாளர்களை உண்மையிலே காயப்படுத்திருந்தால், தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது என்று அர்த்தம்" என வருத்தம் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இயக்குனர் அனுராக் காஷ்யப் இறந்துவிட்டதாக செய்தி! அவரே பகிர்ந்து கேலி!