Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கமல் மகளுக்கு பாட்டியாக நடிக்கும் பழம்பெரும் பாடகி

கமல் மகளுக்கு பாட்டியாக நடிக்கும் பழம்பெரும் பாடகி
, வியாழன், 10 செப்டம்பர் 2020 (22:00 IST)
சமீபத்தில் அக்ஷரா ஹாசன் நடிக்க இருக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளிவந்தது என்பது தெரிந்ததே. டிரெண்ட் லவுட் என்ற நிறுவனம் இயக்கும் தயாரிக்கும் முதல் படமான இந்த படத்தில் அக்சராஹாசன் முக்கிய வேடத்திலும் அவருக்கு பாட்டியாக பிரபல பாடகி உஷா உதுப் நடிக்க உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது
 
இதுகுறித்து இயக்குனர் ராஜமூர்த்தி அவர்கள் கூறியதாவது: இத்தருணம்‌ மிகப்பெரும்‌ பெருமை தரக்கூடியது. வரலாற்று சாதனை நிகழ்த்தியள்ள ஆளுமையான பாடகி உஷா உதுப்‌ அவர்களுடன்‌ பணிபுரிய கிடைத்திருக்கும்‌ இந்த வாய்ப்பு மிகப்பெரும்‌ பாக்கியம்‌ ஆகும்‌.
 
மேலும்‌ 10 வருடத்திற்கு பிறகு ஒரு தமிழ்‌ படத்தில்‌ அதுவும்‌ எங்கள்‌ படம்‌ மூலம்‌ அவரை தமிழில்‌ நடிக்க அழைத்து வருவது எங்களுக்கு பெருமையே. ௮வர்‌ இப்படத்தில்‌ கர்னாடக சங்கீத வித்தகராக, ௮க்‌ஷராஹாசனின்‌ பாட்டியாக நடிக்கிறார்‌. படத்தில்‌ அவரது கதாப்பாத்திரம்‌ அவரது இயல்பு வாழ்விற்கு முற்றிலும்‌ நேரெதிரானது. ஆனால்‌ அவர்‌ இக்கதாப்பாத்திரத்தில்‌ கச்சிதமாக பொருந்திப்‌ போவார்‌. மிகப்பிரபல பாடகி, மிகச்சிறந்த ரடிகர்‌ என்பதை தாண்டி, அனைவரிடமும்‌ மிக எளிமையாக பழகும்‌ ௮வரது அன்பான இயல்பு, ௮வரது துறுதுறுப்பு படக்குழுவில்‌ அனைவரிடமும்‌ பெரும்‌ உற்சாகத்தை கொண்டு வந்திருக்கிறது. ௮வர்‌ முற்றிலும்‌ இயக்குநரின்‌ நடிகை, அவருடன்‌ இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி. 
 
இறுதியாக அவர்‌ நமது உலக நாயகன்‌ கமலஹாசன்‌ அவர்களுடன்‌ திரையில்‌ நடித்திருந்தார்‌. தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு அவரது மகள்‌ ௮க்சஷரா ஹாசனுக்கு பாட்டியாக நடிப்பது மேலும்‌ ஒரு சிறப்பு.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ ஓடிடியில் ரிலீஸா?