Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சீனியர் திருச்சிற்றம்பலம் இவர்தான்: சன்பிக்சர்ஸ் அறிவிப்பு!

Bharathiraja
, வெள்ளி, 10 ஜூன் 2022 (16:48 IST)
தனுஷ் நடித்து முடித்துள்ள திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது என்பதும் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் இந்த படத்தில் நடித்த நடிகர்களின் கேரக்டர் பெயர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அனுஷா என்ற கேரக்டரில் ராஷிகண்ணாவும் ரஞ்சனி என்ற கேரக்டரில் பிரியா பவானி சங்கர் நடித்து வருவதாக ஏற்கனவே சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது.
 
இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தில் சீனியர் திருச்சிற்றம்பலம் கேரக்டரில் பாரதிராஜா நடித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படி என்றால் தனுஷ் ஜூனியர் திருச்சிற்றம்பலம் கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
அனிருத் இசையில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தி ‘விக்ரம் வேதா’ பற்றி முக்கிய அப்டேட்டை வெளியிட்ட ஹ்ருத்திக் ரோஷன்… வைரலாகும் புகைப்படம்!