Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தனது காதல் கதையை நிகழ்ச்சியில் கூறிய பாகுபலி நடிகர் !

Advertiesment
தனது காதல் கதையை நிகழ்ச்சியில் கூறிய பாகுபலி நடிகர் !
, வியாழன், 8 அக்டோபர் 2020 (19:44 IST)
பாகுபலி படத்தில் வில்லனாக நடித்தன் மூலம் இந்தியா முழுவதும் பரவலாக  அறியப்பட்டவர் தெலுங்கு நடிகர்  ராணா.

இவர் கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி தனது பெற்றோர் உறவினர்கள் நண்பர்கள் முன்னிலையில் மிஹீகா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ராணா தனது காதல் குறித்து மனம் திறந்துள்ளார்.
அதில்,தனது காதல் மனைவியை தனக்குச் சிறு வயது முதலே தெரியும் எனவும்  அவரது தங்கையும் மிஹீகாவும் ஒன்றாகப் பள்ளிக்குச் சென்றதாகவும் சில் காலத்திலேயே அவர்கள் ஹைதராபாத்திலிருந்து மும்பைக்கு இடம்பெயர்ந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

பின்னர் இருவரும் அவரவர் துறைகளில் இயங்கி வந்துள்ளனர். அப்போது கொரொனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட சமயத்தில் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது.

இதையடுத்து இருவரும் அவர்வர் வீடுகளில் பேசி அவர்களின் சம்மதம் பெற்றுத் திருமணம் செய்து கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

துருவ நட்சத்திரம் பட பாடல் வெளியீடு ! இணையதளத்தில் வைரல்