Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அஜித்குமார் ரேஸிங் அணி முதலிடம் பிடித்து அசத்தல்.. பெல்ஜியம் கார் பந்தயத்தில் சாதனை..!

Advertiesment
அஜித் குமார்

Mahendran

, திங்கள், 30 ஜூன் 2025 (13:38 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான அஜித் குமார், தற்போது நடிப்பிலிருந்து தற்காலிகமாக விலகி, தனது கவனத்தை கார் பந்தயங்களில் முழுமையாக செலுத்தி வருகிறார். 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு, சில மாதங்களுக்கு கார் பந்தயங்களிலேயே ஈடுபடப்போவதாக அவர் அறிவித்திருந்தார்.
 
இந்த நிலையில், தனது புதிய மொட்டை தோற்றத்தில்  கார் பந்தயங்களில் மும்முரமாக பங்கேற்று வரும் அஜித்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
 
இந்த நிலையில் சமீபத்தில் பெல்ஜியமில் நடைபெற்ற கிரவுட் ஸ்ட்ரைக் ஸ்பா ஜிடி3 சாம்பியன்ஷிப் போட்டியின் ப்ரோ ஏ.எம். பிரிவில், அஜித் குமார் ரேஸிங் அணி முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளது.
 
இது குறித்து அஜித் குமார் ரேஸ் அணி, தங்களின் எக்ஸ் தளப் பதிவில், "எங்கள் அணியின் ஃபேபியன் மற்றும் மேதியூ அடங்கிய குழுவினர், மிகவும் கடினமான இந்த போட்டியில் முதலிடம் பிடித்துள்ளனர். அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்," என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது.
 
முன்னதாக, துபாயில் நடைபெற்ற ஒரு கார் பந்தயத்தில் அஜித்தின் 'அஜித் குமார் ரேஸிங்' அணி மூன்றாவது இடத்தை பிடித்து சாதனை படைத்திருந்தது. மேலும், இத்தாலி மற்றும் பெல்ஜியத்தில் நடந்த போட்டிகளிலும் இந்த பந்தயக் குழு பரிசுகளை வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் மீண்டுமா? பழிவாங்கினானா 456? முடிவுக்கு வந்ததா கேம்? - Squid Game Season 3 Review!