Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கரு படம் ரிலீஸுக்கு முன்பே அடுத்த படத்தை முடித்த விஜய்

கரு படம் ரிலீஸுக்கு முன்பே அடுத்த படத்தை முடித்த விஜய்
, செவ்வாய், 6 பிப்ரவரி 2018 (20:01 IST)
‘கரு’ படத்தைத் தொடர்ந்து, தன்னுடைய அடுத்த படத்தையும் இயக்கி முடித்துவிட்டார் ஏ.எல்.விஜய்.

 
சாய் பல்லவி முதன்முதலாகத் தமிழில் அறிமுகமாகும் படம் ‘கரு’. அபார்ஷனை மையமாகக் கொண்ட இந்தப் படத்தை, ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார். ஒரு குழந்தைக்குத் தாயாக இந்தப் படத்தில் நடித்திருக்கிறார் சாய் பல்லவி. லைகா புரொடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறது. வருகிற 23ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது.
 
இந்நிலையில், தன்னுடைய அடுத்த படத்தையும் இயக்கி முடித்துவிட்டார் ஏ.எல்.விஜய். பிரபுதேவா ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்திற்கு ‘லட்சுமி’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. டான்ஸை மையமாகக் கொண்ட இந்தப் படத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோயினாக நடித்துள்ளார்.
 
சாம் சி.எஸ். இசையமைத்துள்ள இந்தப் படத்தில், மொத்தம் 12 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இதன் படப்பிடிப்பு இரண்டு நாட்களுக்கு முன்பு முடிவடைந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

55 நாட்களுக்கு காரைக்குடியில் தங்குகிறார் விஷால்