Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அவன் இங்க இருக்குற வடைய திங்க மாட்டானோ? வட இந்திய தொழிலாளர்கள் பற்றி பேசும் வடக்கன் டிரைலர்!

Advertiesment
அவன் இங்க இருக்குற வடைய திங்க மாட்டானோ? வட இந்திய தொழிலாளர்கள் பற்றி பேசும் வடக்கன் டிரைலர்!

vinoth

, வியாழன், 25 ஏப்ரல் 2024 (08:04 IST)
எழுத்தாளராகவும், திரைப்பட வசனகர்த்தாவாகவும் அறியப்படும் பாஸ்கர் சக்தி முதல் முறையாக ஒரு படத்தை இயக்கியுள்ளார். எம்டன் மகன், அழகர்சாமியின் குதிரை உள்ளிட்ட படங்களுக்கு கதை வசனம் எழுதியவர் பாஸ்கர் சக்தி, பல சின்னத்திரை சீரியல்களிலும் அவர் பணியாற்றியுள்ளார். இந்த படத்தை டிஸ்கவரி சினிமாஸ் மூலமாக புத்தக பதிப்பாளர் வேடியப்பன் தயாரிக்கிறார்.

பாஸ்கர் சக்தி இயக்கத்தில் தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள வடக்கன் திரைப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. வட மாநிலங்களில் இருந்து தமிழகத்தில் வேலை செய்யும் வட மாநில தொழிலாளர்களைப் பற்றிய படமாக வடக்கன் உருவாகி உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படம் ஷூட்டிங் முடிந்து இப்போது ரிலீஸ் பணிகள் நடந்து வரும் நிலையில் படத்தை இயக்குனரும் தயாரிப்பாளருமான லிங்குசாமி தன்னுடைய திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் மூலமாக வெளியிடுகிறார். மாஸ்டர்பீஸ் புரொடக்‌ஷன் நிறுவனத்துடன் இணைந்து திருப்பதி பிரதர்ஸ் வெளியிடுகிறது. இந்த படம் மே மாதம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. தமிழகத்தில் பெருமளவு உடலுழைப்பு சார்ந்த வேலையில் ஈடுபடும் வடமாநில தொழிலாளர்களுக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்களுக்குமான உரசலை சொல்லும் படமாக இருக்கும் என டீசர் கோடிட்டு காட்டுகிறது. இந்த டீசர் இப்போது சமூகவலைதளங்களில் வைரல் ஆகிவருகிறது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குக் வித் கோமாளி சீசன் 5: 10 குக்குகள் பெயர் அதிகாரபூர்வ அறிவிப்பு.. லிஸ்ட் இதோ..!