Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பராசக்தி படத்தில் இணையும் பிரபல மலையாள நடிகர்..!

vinoth
சனி, 15 மார்ச் 2025 (08:10 IST)
சூர்யா நடிப்பில் உருவாக இருந்து கைவிடப்பட்ட புறநானூறு கதையை இப்போது சிவகார்த்திகேயனை வைத்து ’பராசக்தி’ என்ற பெயரில் டான் பிக்சர்ஸ் நிறுவனத்துக்காக சுதா கொங்கரா இயக்கி வருகிறார். அது சிவகார்த்திகேயனின் 25 ஆவது படமாக உருவாகி வருகிறது. படத்தில் முக்கிய வேடங்களில் ஜெயம் ரவி, அதர்வா மற்றும் ஸ்ரீ லீலா ஆகியோர் நடிக்கின்றனர். ஜி வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

தற்போது இலங்கையில்படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சில வாரங்களுக்கு முன்னர் இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டு முன்னோட்ட வீடியோவும் வெளியானது. அது ரசிகர்கள் மத்தியில் பெரியளவில் கவனம் பெற்றது. இந்த படத்தில் ஏற்கனவே மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகிறது.

இந்நிலையில் இப்போது மேலும் ஒரு பிரபல நடிகர் இந்த படத்தில் இணைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. மலையாள நடிகர் பாசில் ஜோசப் இலங்கையில் நடிக்கும் படப்பிடிப்பில் இணைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

LIK படத்தின் ஷூட்டிங்கை முடித்த விக்னேஷ் சிவன்…!

200 கோடி ரூபாய் வசூலை நோக்கி அஜித்தின் ‘குட் பேட் அக்லி’!

மீண்டும் வைரல் ஆகிவிட்டேன்… குட் பேட் அக்லி குறித்து பிரியா வாரியர் மகிழ்ச்சி!

விஜய்யின் ஜனநாயகன் படத்தில் இணையும் பாடகர் ஹனுமான்கைண்ட்!

இயக்குனர்& நடிகர் எஸ் எஸ் ஸ்டான்லி காலமானார்…!

அடுத்த கட்டுரையில்
Show comments