Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாலகிருஷ்ணா காலில் விழுந்துட்டா எந்த பிரச்சனையும் இருக்காது… பிரபல பத்திரிக்கையாளர் பதில்!

பாலகிருஷ்ணா காலில் விழுந்துட்டா எந்த பிரச்சனையும் இருக்காது… பிரபல பத்திரிக்கையாளர் பதில்!

vinoth

, புதன், 5 ஜூன் 2024 (16:38 IST)
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக 40 ஆண்டுகளுக்கு மேல் இருப்பர் பாலகிருஷ்ணா. அவர் இதுவரை 100 படங்களுக்கு மேல் நடித்துள்ள நிலையில் அவரை ஒரு கடவுள் போல அவரது ரசிகர்கள் கொண்டாடுகின்றனர். அதற்கு அவர் மறைந்த நடிகர் என் டி ராமாராவின் மகன் என்பதும் ஒரு காரணம்.

இப்படிப்பட்ட பாலகிருஷ்ணா அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். சமீபத்தில் ஒரு சினிமா நிகழ்ச்சியில் நடிகை அஞ்சலியை அவர் பிடித்துத் தள்ளியது சர்ச்சைகளைக் கிளப்பியது. சில ஆண்டுகளுக்கு முன்னர் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானை அவமதிக்கும் விதமாக இவர் பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பாலகிருஷ்ணாவின் சேட்டைகள் குறித்து பேசியுள்ள பிரபல பத்திரிக்கையாளர் அந்தணன் “நயன்தாரா எல்லாம் அவரோடு நான்கு படங்கள் நடித்துள்ளார். அவரோடு நடிக்கும் போனதும் அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிவிட்டால் எந்த பிரச்சனையும் வராது” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் வருகிறார் நட்டோரியஸ் கேங்ஸ்டர் டாமி ஷெல்பி! – திரைப்படமாகிறது Peaky Blinders!