Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிறுநீரகப் பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பவர் ஸ்டார் சீனிவாசன்!

Advertiesment
Power Star Srinivasan

vinoth

, வியாழன், 5 டிசம்பர் 2024 (08:08 IST)
லத்திகா என்ற மொக்கை படத்தை ஒரு வருடத்துக்கும் மேல் சொந்த செலவில் ஓட்டி ஏகப்பட்ட பப்ளிசிட்டி செய்து சினிமா உலகினரை ‘யார்றா இவரு’ என வியக்க வைத்தவர் பவர் ஸ்டார் சீனிவாசன். அதன் பின்னர் சந்தானத்தோடு நடித்த கண்ணா லட்டு திண்ண ஆசையா படத்தின் வெற்றியால் குறிப்பிடத்தகுந்த நகைச்சுவை நடிகராக உருவானார்.
 
ஆனாலும் செக் மோசடி வழக்கில் கைது என சில சர்ச்சைகளில் சிக்கி சிறை சென்று வந்தார். இப்போதும் சில படங்களில் நடித்து வருகிறார். ஆனால் அவருக்கு முன்பு கிடைத்த புகழ் வெளிச்சம் தற்போது கிடைப்பதில்லை. அவரைப் படங்களில் பார்த்தும் பல மாதங்கள் ஆகிவிட்டது.

இந்நிலையில் அவர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிறுநீரகத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சிகிச்சைக்கு சென்ற அவரை மருத்துவர்கள் ஒரு வாரம் உள்நோயாளியாக தங்கி சிகிச்சைப் பெற சொல்லி வலியுறுத்தியுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’புஷ்பா 2’ படம் பார்க்க சென்ற இளம் பெண் நெரிசலில் சிக்கி பலி.. குழந்தை மயக்கம்..!