Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாலாவின் ‘வணங்கான்’ டிரைலர் எப்போது? அருண் விஜய் அறிவிப்பு..!

பாலாவின் ‘வணங்கான்’ டிரைலர் எப்போது? அருண் விஜய் அறிவிப்பு..!

Mahendran

, சனி, 6 ஜூலை 2024 (13:09 IST)
தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவான வணங்கான் படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி சற்றுமுன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வணங்கான் என்ற படம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்ததும் இந்த படத்தில் இருந்து சூர்யா விலகி விட்டதாக கூறப்பட்டது. 
 
இதனை அடுத்து சூர்யாவுக்கு பதில் அருண் விஜய் இந்த படத்தில் நடிக்க கமிட்டாகி படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்ததாக கூறப்பட்டது. 
 
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் வரும் ஆகஸ்ட் மாதம் இந்த படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் வணங்கான் படத்தின் டிரைலர் நாளை மறுநாள் அதாவது ஜூலை 8ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு பாலா படத்தின் டிரைலர் வெளியாக உள்ளதை அடுத்து இந்த படத்தின் டிரைலருக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 
 
பாலா இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் அருண் விஜய், ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஷ்கின் உள்பட பலர் நடித்துள்ளனர். சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், குருதேவ் ஒளிப்பதிவில், சத்ய சூர்யா படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தக் லைஃப் படத்தின் ஷூட்டிங்கில் இழுபறி… இதுதான் காரணமா?