டால்பி தொழில்நுட்பத்தில் புதுப்பொலிவுடன் ரிலீஸாகும் ‘பாகுபலி –தி எபிக்’!

vinoth
திங்கள், 29 செப்டம்பர் 2025 (10:33 IST)
இந்திய சினிமாவில் முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் அனைவரும் தங்கள் எல்லைத் தாண்டி பேன் இந்தியா அளவுக்கு செல்லவேண்டும் என்ற முனைப்போடு படங்களை உருவாக்கி வருகின்றனர். இதனால் பேன் இந்தியா சினிமா என்ற புதிய வகையினமே உருவாகியுள்ளது.

இந்த பேன் இந்தியா சினிமா என்ற வகைமையை உருவாக்கியதில் முன்னத்தி ஏர் என்று எஸ் எஸ் ராஜமௌலியை சொல்லலாம். அவர் இயக்கிய பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்கள் இந்தியா முழுவதும் வெற்றி பெற்று வசூலில் சாதனைப் படைத்தன. அதன் பின்னர் கே ஜி எஃப், புஷ்பா என அந்த பார்முலாவைப் பின்பற்றி வெற்றிக் கொடி நாட்டின.

இந்நிலையில் பாகுபலி படத்தின் முதல் பாகம் ரிலீஸாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை அதன் இரண்டு பாகங்களையும் ஒன்றாக்கி ஒரே பாகமாக ரி ரிலீஸ் செய்யவுள்ளனர். வரும் அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி திரையரங்குகளில் ‘பாகுபலி-The epic” என்ற பெயரில் இந்த படம் ரிலீஸாகவுள்ளதாக எஸ் எஸ் ராஜமௌலி அறிவித்துள்ளார்.
இந்நிலையில் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியாகும் பாகுபலி தற்போது டால்பி அட்மாஸ் மற்றும் டால்பி விஷன் தொழில்நுட்பத்தில் புதுப்பொலிவுடன் ரிலீஸாகவுள்ளது. விரைவில் படத்தின் டிரைலர் ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆர்.ஜே. பாலாஜியின் அடுத்த படம்: இந்த பிரபல நடிகர் தான் ஹீரோவா?

மாரி செல்வராஜ் - இன்பநிதி' படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போகிறதா? என்ன காரணம்?

கரூர் சம்பவ காட்சிகள் ‘ஜனநாயகன்’ படத்தில் வருகிறதா? தீயாய் பரவும் வதந்திகள்..!

மாடர்ன் உடையில் அசத்தும் மாளவிகா மோகனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

சேலையில் சிக்கென்ற போஸில் அசத்தும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

அடுத்த கட்டுரையில்
Show comments